Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி உத்தரவு

ராஜஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி உத்தரவு

By: Karunakaran Mon, 27 July 2020 12:33:05 PM

ராஜஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி உத்தரவு

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அசோக் கெலாட்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், அவர் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது

அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் கடந்தவாரம் மனுத்தாக்கல் செய்தார்.

bahujan samaj party,rajasthan,congress,no-confidence motion ,பகுஜன் சமாஜ் கட்சி, ராஜஸ்தான், காங்கிரஸ், நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்நிலையில் ராஜஸ்தான் சட்டசபையை கூட்டும் தேதியை அறிவிக்க முதல்வர் அசோக் கெலாட் கவர்னர் கலராஜ் மிஸ்ராவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். தற்போது ராஜஸ்தானில் உள்ள பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கட்சி தலைமை உத்தரவிட்டு உள்ளது.

ராஜஸ்தான் சட்டசபையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆர்.எல்.குதா, லகன் சிங், தீப் சந்த், ஜே.எஸ்.அவானா, சந்தீப் குமார் மற்றும் வாஜிப் அலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கட்சி தலைமை தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறினால் தகுதி நீக்கம் செய்ய நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :