Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

By: Monisha Tue, 15 Sept 2020 2:33:19 PM

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

rain,mettur dam,cauvery,delta,irrigation ,மழை,மேட்டூர் அணை,காவிரி,டெல்டா,பாசனம்

நேற்று காலையில் 8 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்கு- மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று காலையில் 92.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 92 அடியாக சரிந்துள்ளது.

Tags :
|
|