Advertisement

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

By: Monisha Tue, 08 Sept 2020 2:41:31 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 487 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 8 ஆயிரத்து 286 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7 ஆயிரத்து 487 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

mettur dam,cauvery,delta,irrigation,water ,மேட்டூர் அணை,காவிரி,டெல்டா,பாசனம்,தண்ணீர்

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 91.36 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து 91.40 அடியாக உயர்ந்தது.

Tags :
|