Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக-தமிழக எல்லையோர கிராம பகுதிகளில் காட்டு யானைகள் முகாம்

கர்நாடக-தமிழக எல்லையோர கிராம பகுதிகளில் காட்டு யானைகள் முகாம்

By: Monisha Tue, 22 Dec 2020 3:45:23 PM

கர்நாடக-தமிழக எல்லையோர கிராம பகுதிகளில் காட்டு யானைகள் முகாம்

கர்நாடக மாநிலத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள காப்புக்காட்டுக்குள் இடம் பெயர்ந்தன. இந்த யானைகள் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.

யானைகள் தனித்தனி குழுவாக பிரிந்து தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சானமாவு, தளி மற்றும் அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் முகாமிட்டு அங்குள்ள பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அந்த 30 யானைகள் கூட்டமாக நேற்று மதியம் ஓசூர் அருகே உள்ள அஞ்சலகிரி கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் முகாமிட்டிருந்தது. இவற்றில் சில யானைகள் மட்டும் அங்கு இருந்த வாழைகள், மற்றும் ராகி பயிர்களை நாசம் செய்தன.

wild elephants,camp,forest,forest,warning ,காட்டு யானைகள்,முகாம்,வனப்பகுதி,வனத்துறை,எச்சரிக்கை

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் முயன்றனர். ஆனால் அந்த யானைகள் கூட்டமாக காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே நின்றது. இதையடுத்து முகாமிட்டுள்ள அந்த யானைகள் நள்ளிரவில் மெதுவாக தைலமரத்தோப்பு பகுதிக்கு சென்றது.

அங்கு முகாமிட்டுள்ள இருந்த 30 யானைகளை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு அஞ்சலகிரி, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். மேலும் கிராம மக்கள் வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கால் நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப காப்புக்காட்டுக்கு விவசாயிகள் வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|
|