Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழைக்காலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்குமா?

மழைக்காலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்குமா?

By: Monisha Sat, 07 Nov 2020 1:16:36 PM

மழைக்காலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்குமா?

மதுரையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது. இருப்பினும் 50-க்கும் குறைவான நபர்கள் தினம்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் காலமான மார்ச், ஏப்ரல் மாதத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் லேசான மழைதான் பெய்தது. அதிலும் மதுரையில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு அதிகம் தாக்கும் என்பதால் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

rainy season,corona virus,infection,madurai,testing ,மழைக்காலம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,மதுரை,பரிசோதனை

மழைக்காலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்குமா-குறையுமா? என்பதை இப்போது உறுதியாக கூறமுடியாது. அதிகரிக்கும் என்ற கண்ணோட்டத்தோடு அதனை கட்டுப்படுத்துவதற்காக பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதிகரிக்கவில்லை என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். அரசு அறிவுறுத்தும் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடித்து வருகிறோம்.

மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், மக்கள் வெளிய வர தயங்குவார்கள். அதன் மூலம் கொரோனா பாதிப்பு குறையவும் வாய்ப்புள்ளது. மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்போது நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், நகர் மற்றும் புறநகர் பகுதியில் நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :