Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசின் அனுமதி கிடைத்ததால் விளையாட்டு நிகழ்வுகளை இனி படிப்படியாக துவங்க நடவடிக்கை

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததால் விளையாட்டு நிகழ்வுகளை இனி படிப்படியாக துவங்க நடவடிக்கை

By: Nagaraj Fri, 22 May 2020 10:22:23 AM

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததால் விளையாட்டு நிகழ்வுகளை இனி படிப்படியாக துவங்க நடவடிக்கை

4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து விளையாட்டு நிகழ்வுகளை படிப்படியாக துவக்க இந்திய விளையாட்டு கமிஷன் (எஸ்.ஏ.ஐ.,) திட்டமிட்டுள்ளது.

இதற்காக திட்ட முறையையும் (எஸ்.ஓ.பி.,) தயார் செய்து வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து விளையாட்டு நிகழ்வுகளை துவக்க விளையாட்டு கமிஷன் முடிவு செய்துள்ளது.

working group,athletes,action,federal government,permission ,
பணிக்குழு, விளையாட்டு வீரர்கள், நடவடிக்கை, மத்திய அரசு, அனுமதி

இதற்கான நடைமுறைகளை 4 பிரிவுகளாக பிரித்து, கூட்டமைப்புகள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிகளை, எஸ்.ஓ.பி., தயாரித்து வெளியிட்டுள்ளது. தொடர்பு அல்லாத, நடுத்தர தொடர்பு, முழு தொடர்பு மற்றும் தண்ணீர் விளையாட்டு என நான்கு பிரிவுகளாக விளையாட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிற்கும் பயிற்சி மீண்டும் தொடங்க பல்வேறு நடைமுறைகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும், வெவ்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆரோக்கிய சேது ஆப்-ஐ, அனைத்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

மேலும் அனைத்து குழுவிற்கும் கொரோனா பணிக்குழு நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
|