Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏற்காட்டில் குரங்குகளுக்கு உணவு அளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிப்பு

ஏற்காட்டில் குரங்குகளுக்கு உணவு அளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிப்பு

By: Nagaraj Wed, 18 Nov 2020 2:50:45 PM

ஏற்காட்டில் குரங்குகளுக்கு உணவு அளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிப்பு

குரங்குகளுக்கு உணவு அளிக்க தடை... சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் குரங்குகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உணவளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

ஏற்பாடு சுற்றுலா செல்லும் பயணிகள் மனிதர்கள் உண்ணும் உணவுகளை குரங்குகளுக்கு கொடுக்கின்றனர். அதனால் அவற்றிற்கு மனிதர்களை போல் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை வருவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

monkeys,tourists,ban,food ,குரங்குகள், சுற்றுலாப்பயணிகள், தடை விதிப்பு, உணவு

குரங்குகள் இயற்கையாக காடுகளில் கிடைக்கும் பழங்கள், காய்களை உட்கொண்டு வாழும் விலங்கினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கொடுக்கும் உணவுகளால் அவற்றில் உடல்நலம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் உணவு தேடி குரங்குகள் சாலைக்கு வருவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
|