Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது

இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது

By: Karunakaran Sun, 27 Dec 2020 12:09:06 PM

இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. துவக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.

லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் சுதாரித்த ஷுப்மான் கில், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது.

lunch break,second day,india,australia match ,மதிய உணவு இடைவேளை, இரண்டாவது நாள், இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில், போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ஷூப்மான் கில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து 17 ரன்கள் எடுத்திருந்த புஜாராவும் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் வந்த ரஹானே, ஹனுமா விஹாரி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட 105 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. ரஹானே 10 ரன்னிலும், விஹாரி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Tags :
|