Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தது சென்னை அணி பின்னடைவு

ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தது சென்னை அணி பின்னடைவு

By: Karunakaran Sat, 03 Oct 2020 1:50:50 PM

ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்தது சென்னை அணி பின்னடைவு

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக போட்டியில் சிஎஸ்கே 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. வார்னர் டாஸ் வென்றதும் பேட்டிங் தேர்வு செய்தார். அப்போது டோனி கூறும்போது நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம் என்றார். அப்போதே 150 ரன்களுக்கு மேல் கொடுத்து விட்டால் சேஸிங் செய்வது கடினம் என்பதை டோனி தெளிவாக புரிந்து கொண்டார்.

சாவ்லா வீசிய அந்த ஓவரில் வார்னேர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். அப்போது ஐதராபாத் 11 ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐதராபாத் 125 ரன்னைத் தாண்டுவது கடினம் என்ற நிலை இருந்தது. பிரியம் கார்க் - அபிஷேக் சர்மா ஜோடி 14-வது ஓவரில் இருந்து சார்ஜ் எடுத்தது ஜடேஜா வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்ததால் இளம் ஜோடிக்கு நம்பிக்கை கிடைத்தது.

chennai team,22 runs,one over,hydrabad ,சென்னை அணி, 22 ரன்கள், ஒரு ஓவர், ஹைதராபாத்

ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுக்க சென்னை அணியிடம் இருந்து போட்டி மெதுவாக சன்ரைசர்ஸ் கைக்குச் சென்றது. தீபக் சாஹர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா முதல் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். ஜடேஜா அதை தவறவிட்டதும், பந்து பவுண்டரிக்கு சென்றது. அடுத்த பந்தில் ஷர்துல் தாகூர் கேட்ச் விட்டார். சாம் கர்ரனின் ஒரு ஓவர், இரண்டு கேட்சி மிஸ்சிங், பிரியம் கார்க் 26 பந்தில் 51 ரன்கள் விளாசியது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் 164 ரன்கள் அடிக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

பேட்டிங் செய்யும்போது 3-வது ஓவரில் வாட்சன் 1 ரன்னில் அவுட்டாகி சரிவை தொடங்கி வைத்தார். கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் ரன் அவுட் ஆக ஒட்டுமொத்த போட்டியும் 6 ஓவருக்குகள் முடிந்த நிலை ஏற்பட்டது. 16 ஓவர் வரை ஜடேஜா 25 பந்தில் 23 ரன்களும், டோனி 27 பந்தில் 24 ரன்கள் என மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 17-வது ஓவரில் இருந்து ஜடேஜா சார்ஜ் எடுத்தார். அந்த ஓவரில் 3 பவுண்டரி, 18-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 34 பந்தில் அரைசதம் அடித்தார். 17.5 ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை டோனி 9 பந்தில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். இதுவும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

Tags :