Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பைக்கு எதிராக டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு

ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பைக்கு எதிராக டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு

By: Karunakaran Thu, 05 Nov 2020 7:52:53 PM

ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பைக்கு எதிராக டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதற்கான புள்ளிபட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இடம்பிடித்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-1 துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதில் புள்ளிபட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி., முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

delhi,mumbai,ipl 2020,dubai ,டெல்லி, மும்பை, ஐபிஎல் 2020, துபாய்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், 1. தவான், 2. பிரித்வி ஷா, 3. ரகானே, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10, நோர்ஜே, 11. டேனியல் சாம்ஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ, 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குர்ணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. பும்ரா, 10. டிரென்ட் போல்ட், 11. நாதன் கவுல்டர்-நைல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Tags :
|
|