Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம் இடத்துக்கு தள்ளப்பட்டது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம் இடத்துக்கு தள்ளப்பட்டது

By: Karunakaran Fri, 20 Nov 2020 1:14:10 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம் இடத்துக்கு தள்ளப்பட்டது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் வெற்றி, டிராவுக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டது. இதில் இந்திய அணி 4 தொடரில் பங்கேற்று 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது.

ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் 296 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் கணக்கீட்டு முறையை ஐ.சி.சி. மாற்றியுள்ளது. சதவீத அடிப்படையில் அணிகளை வரிசைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

india,2nd place,world test championship,australia ,இந்தியா, 2 வது இடம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஸ்திரேலியா

தற்போது இந்திய அணி 75 சதவீதத்துடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. முதல் இடத்தை ஆஸ்திரேலியா 82.22 சதவீதத்துடன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. 3-வது இடத்தில் இங்கிலாந்தும் (60.83 சதவீதம்), 4-வது இடத்தில் நியூசிலாந்து (50 சதவிதம்) உள்ளன.

அனில்கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பரிந்துரையை ஏற்று உலக டெஸ்ட் சாம்பியன் புள்ளிகள் பட்டியலில் கணக்கீட்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கணக்கீட்டு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 2-வது இடம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Tags :
|