Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்

ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்

By: Karunakaran Tue, 24 Nov 2020 11:56:52 AM

ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்

இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 13 வது ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன. இந்த 13 வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் வெளியிட்டு உள்ள தகவலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian cricket board,4000 crore,ipl matches,uae ,இந்திய கிரிக்கெட் வாரியம், 4000 கோடி, ஐபிஎல் போட்டிகள், யுஏஇ

தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. 60 போட்டிகளில் 1800 தனி நபர்கள் உள்பட 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது

இதுகுறித்து அருண் துமல் கூறுகையில், கடந்த ஐபிஎல் உடன் ஒப்பிடும்போது வாரியம் கிட்டத்தட்ட 35 சதவீத செலவை குறைக்க முடிந்தது. நாங்கள் ரூ.4,000 கோடி சம்பாதித்தோம். எங்கள் தொலைக்காட்சி பார்வையாளர்கள் சுமார் 25 சதவீதம் உயர்ந்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Tags :