Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வெற்றி உற்சாகத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்

வெற்றி உற்சாகத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்

By: Nagaraj Mon, 07 Dec 2020 4:28:32 PM

வெற்றி உற்சாகத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்

வெற்றி மகிழ்ச்சியுடன் பிறந்த நாளையும் உற்சாகம் கொண்டாடி உள்ளனர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி 20 மற்றும் நான்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது.

birthday,shikhar dhawan,cut the cake,excitement,twitter ,பிறந்தநாள், ஷிகர் தவான், கேக் வெட்டினர், உற்சாகம், ட்விட்டர்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. ஹர்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மேலும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது.

Tags :