Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஒருவருக்கு கொரோனாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட ஐ.பி.எல் போட்டி சிக்கலாகி விடும் - நெஸ் வாடியா

ஒருவருக்கு கொரோனாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட ஐ.பி.எல் போட்டி சிக்கலாகி விடும் - நெஸ் வாடியா

By: Karunakaran Fri, 07 Aug 2020 11:17:10 AM

ஒருவருக்கு கொரோனாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட ஐ.பி.எல் போட்டி சிக்கலாகி விடும் - நெஸ் வாடியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் பயணிக்கும் முன்பு இருந்தே அவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடங்கி விடும். இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்து கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வீரர்கள், அணியின் உதவியாளர்கள், நிர்வாகிகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ipl match,corona virus,ness wadia,punjab team ,ஐபிஎல் போட்டி, கொரோனா வைரஸ், நெஸ் வாடியா, பஞ்சாப் அணி

இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ்வாடியா, இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பாதுகாப்பு குறித்து தான் நாங்கள் அதிகம் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். இந்த தொடரின் போது சம்பந்தப்பட்ட யாராவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கூட ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். ஐ.பி.எல். போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் ‘ஸ்பான்சர்’களை அணுகுவது என்பது கடினமானதாகும். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி வழக்கத்தை விட அதிகம் பேர் பார்க்கும் போட்டியாக அமையாவிட்டால் நான் எனது பெயரை மாற்றிக் கொள்ள தயார். இந்த ஐ.பி.எல். போட்டியில் ஸ்பான்சர்கள் பங்கேற்க மறுத்தால் அவர்கள் தான் முட்டாள். நான் ஸ்பான்சராக இருந்தால் நிச்சயம் இந்த போட்டிக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறினார்.

Tags :