Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வர முடியாதது துரதிருஷ்டம் - இர்பான் பதான்

ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வர முடியாதது துரதிருஷ்டம் - இர்பான் பதான்

By: Karunakaran Sat, 01 Aug 2020 7:23:58 PM

ஆல்-ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதல் 10 இடத்திற்குள் வர முடியாதது துரதிருஷ்டம் - இர்பான் பதான்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு காரணம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்தான். இதன் காரணமாக, அவர் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம்பிடித்தார்.

இந்நிலையில் இந்திய வீரர் இர்பான் பதான், பென் ஸ்டோக்ஸ் போன்ற மேட்ச் வின்னர் இந்திய அணிக்குத் தேவை. இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இதுவரை தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் வராதது துரதிருஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

unfortunate,hardik pandya,all-rounder,irfan pathan ,துரதிர்ஷ்டம், ஹார்டிக் பாண்ட்யா, ஆல்ரவுண்டர், இர்பான் பதான்

இதுகுறித்து அவர், இங்கிலாந்துக்கு போட்டிகளை வென்று கொடுத்த வகையில் பென் ஸ்டோக்ஸ் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராகியுள்ளார். இதேபோன்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும் நபர் தேவை. யுவராஜ் சிங் அதுபோன்ற வீரராக திகழ்ந்தார் என்று கூறினார்.

மேலும் அவர், இந்திய அணிக்காக எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியின் ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் முதல் 10 இடத்திற்குள் ஹர்திக் பாண்ட்யா இல்லாதது துரதிருஷ்டவசமானது. அதற்கான ஆற்றல் அவரிடம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றிக்கு தேடிக்கொடுக்க முடியும் என்றால், இந்த அணி வெல்ல முடியாததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :