Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

By: Karunakaran Sat, 24 Oct 2020 9:57:09 PM

டெல்லி அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 42 ஆவது லீக் ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுக்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர்.

தினேஷ் கார்த்திக் 3 ரன்னில் வெளியேற கொல்கத்தா அணி 7.2 ஓவரில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த சுனில் நரைன், ராணாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளை சந்தித்த நரைன் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் குவித்து ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார். நிதிஷ் ராணா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 81 ரன்கள் குவித்து ஸ்டாய்னஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

kolkata,delhi,59 runs,ipl 2020 ,கொல்கத்தா, டெல்லி, 59 ரன்கள், ஐபிஎல் 2020

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 194 ரன்களை குவித்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்க வீரரான தவான் 6 பந்துகளில் 6 ரன் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார். அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரான் ஹேட்மயர் 5 பந்தில் 10 ரன் எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதனால், டெல்லி அணி 13.2 ஓவரில் 95 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் சக்ரவர்த்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த டெல்லி வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Tags :
|