Advertisement

சென்னை அணியை தோல்வி அடைய செய்த கொல்கத்தா அணி

By: Nagaraj Thu, 08 Oct 2020 09:16:53 AM

சென்னை அணியை தோல்வி அடைய செய்த கொல்கத்தா அணி

சிறப்பாக பந்து வீசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஷுப்மான் கில் 11 ரன்னிலும், நிதிஷ் ரானா 9 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4 ஓவர்களில் 37 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை பிரோவோ வீழ்த்தினார்.

chennai team,defeat,kolkata,10 runs,third place ,சென்னை அணி, தோல்வி, கொல்கத்தா, 10 ரன்கள், மூன்றாமிடம்

168 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் களமிறங்கிய துவக்க வீரர் டுபிளெஸ்ஸி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷேன் வாட்சன் 40 பந்துகளில் 50 ரன்களை எடுத்து சுனில் நரைன் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.

அம்பதி ராயுடு 30 ரன்னிலும், கேப்டன் தோனி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இப்போட்டியில் 84 ரன்கள் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ராகுல் திரிபாதிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாமிடத்தை பிடித்தது.

Tags :
|