Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிகம் வாங்கிய வீரர்கள் பட்டியல்

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிகம் வாங்கிய வீரர்கள் பட்டியல்

By: Karunakaran Mon, 28 Dec 2020 8:08:38 PM

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிகம் வாங்கிய வீரர்கள் பட்டியல்

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை அவர்களின் திறமைக்கு ஏற்றபடி தரம்பிரித்து ஒப்பந்தம் செய்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான பும்ரா, தனது தனித்திறமையான பந்து வீச்சால் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத பந்து வீச்சாளராக மாறியுள்ளார்.

இவர் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ‘ஏ’ பிளஸ் பிரிவில் உள்ளார். வீரர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் வழங்கப்படும். இந்த சம்பளத்தில் மாற்றம் ஏதும் கிடையாது. அனைவருக்கும் ஒரேமாதிரியான சம்பளம்தான். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 2020-க்கான சம்பளத்தை அதிக வாங்கிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் பும்ரா.

highest paid players,virat kohli,indian cricket board,bumrah ,அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள், விராட் கோஹ்லி, இந்திய கிரிக்கெட் வாரியம், பும்ரா

இந்திய சீனியர் அணியில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட 15 லட்சம் ரூபாயும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாயும், டி20 கிரிக்கெட் போட்டிக்கு 3 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியோடு 2020-ம் ஆண்டுக்கான போட்டி முடிவடைகிறது. பும்ரா 4 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடி 1.38 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

விராட் கோலி 3 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகள் என 1.29 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். மெல்போர்ன் டெஸ்டில் விளையாடியிருந்தால் பும்ராவை தாண்டியிருப்பார். ரோகித் சர்மா 3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் என 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குகிறார். ஜடேஜா 2 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் என 96 லட்சம் ரூபாய் வாங்குகிறார்.

Tags :