Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

By: Karunakaran Sat, 17 Oct 2020 2:09:44 PM

மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட்டின் 32-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 148 ரன்களே எடுத்தது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், மோர்கன் 39 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

mumbai indians,kolkata knight riders,8 wickets,ipl2020 ,மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 8 விக்கெட், ஐபிஎல் 2020

இதனால் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த ஜோடி 10.3 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ரோகித் சர்மா 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுபக்கம் டி காக் 25 பந்தில் அரைசதம் கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி காக் 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Tags :