Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

பெங்களூர் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

By: Karunakaran Thu, 29 Oct 2020 12:11:56 PM

பெங்களூர் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றபோது, மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 7.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 15 ரன்னிலும், ஷிவம் டுபே 2 ரன்னிலும் வெளியேறினர். தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. குர்கீரத் சிங் மான் 14 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

mumbai indians,5 wickets,bangalore team,ipl 2020 ,மும்பை இந்தியன்ஸ், 5 விக்கெட், பெங்களூர் அணி, ஐ.பி.எல் 2020

பின்னர், 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். 19 பந்துகளில் 18 எடுத்த நிலையில் டிகாக்கும், 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் வெளியேறினர். ஒரு புறம் விக்கெட்டுகள் சாய்ந்த போதும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.

இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 79 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Tags :