Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐ.பி.எல்-ல் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்தும் சரியாக விளையாடாத வீரர்கள்

ஐ.பி.எல்-ல் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்தும் சரியாக விளையாடாத வீரர்கள்

By: Nagaraj Wed, 11 Nov 2020 7:49:07 PM

ஐ.பி.எல்-ல் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்தும் சரியாக விளையாடாத வீரர்கள்

ஐபிஎல் போட்டி தொடரில் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சரியாக விளையாடாத ஐந்து வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2020 க்கான ஐபிஎல் போட்டித் தொடர் துபாய் அமீரகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது. 2020 க்கான ஐபிஎல் போட்டி தொடரில் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சரியாக விளையாடாத ஐந்து வீரர்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

ஆன்ரே ரசல் (கொல்கத்தா). 2019 கொல்கத்தா அணியில் சிறப்பாகவும் அதிரடியாக விளையாடி இந்த வருடம் எதிர்பார்த்த அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தவில்லை .

கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப்): பஞ்சாப் அணிக்காக 10.74 கோடிக்கு எடுக்கப்பட்ட வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் 2014 சீசன் மிகச் சிறப்பாக செயல்பட்டு 500க்கும் அதிகமான ரன்களை எடுத்தார்.
ஆனால் இந்த ஆண்டு இவர் சிறப்பாக செயல்படவில்லை.

11 போட்டிகளில் பங்கேற்று 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவருடைய ஆவரேஜ் 15.43 மற்றும் ஸ்டிரைக் ரேட் 101.89.மேலும் இவர் 11 போட்டிகளில் பங்கேற்று வெறும் 106 பந்துகளை மட்டுமே சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ipl,non-players,mumbai indians,crack ,ஐ.பி.எல்., விளையாடாத வீரர்கள், மும்பை இந்தியன்ஸ், வேகப்பந்து

கேதர் ஜாதவ் (சென்னை): சிஎஸ்கே அணிக்காக 2018இல் 7.80 கோடிக்கு ஏழத்தில் எடுக்கப்பட்ட இவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. 2020 க்கான ஐபிஎல் போட்டி தொடரில் 8 போட்டிகளில் பங்கெடுத்து வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இவரின் அவரேஜ் 20.66 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 93.93.
பின் இவர் சரியாக விளையாடாத காரணத்தால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இருந்து கைவிடப்படார்.

செல்டன் காட்ரல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்): கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட சல்யூட் மாஸ்டர் என்று செல்லமாக அழைக்கப்படும் செல்டன் காட்ரல் 8.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் எதிர்பார்த்த அளவிற்கு இந்த ஆண்டு சிறப்பாக செயல்படவில்லை. 6 போட்டிகளில் பங்கெடுத்து வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தர். மேலும் இவருடைய எக்கோனமி ரேட் 8.80.

நாதன் குல்டர் நைல்(மும்பை).: 2020 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 8 கோடி ரூபாய் இடத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் நாதன் குல்டர் நைல் காயம் காரணமாக பல போட்டிகளில் பங்குபெற முடியவில்லை. இவர் 7 போட்டிகளில் பங்கெடுத்து 5 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் கவுட்டர் நைல் எவ்வளவோ பரவாயில்லை என்பதே உண்மை.

Tags :
|