Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 126 ரன்களை எடுத்தது

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 126 ரன்களை எடுத்தது

By: Karunakaran Sat, 24 Oct 2020 10:36:42 PM

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 126 ரன்களை எடுத்தது

ஐபிஎல் கிரிக்கெட்டின் 43-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கிங்ஸ் வெவன் பஞ்சாப் அணியை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், மந்தீப் சிங் ஆகியோர் களமிறங்கினர்.

14 பந்தில் 17 ரன்கள் எடுத்திருந்த மந்தீப் சிங் ஐதராபாத் வீரர் சந்தீப் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் 20 பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், தொடக்க வீரரும் கேப்டனுமான கேஎல் ராகுல் 27 பந்தில் 27 ரன் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார்.

punjab,126 runs,hyderabad,ipl 2020 ,பஞ்சாப், 126 ரன்கள், ஹைதராபாத், ஐபிஎல் 2020

அடுத்து வந்த மேக்ஸ்வெல் 13 பந்தில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆகி இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா, கிரிஸ் ஜோர்டன் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிக்கோலஸ் பூரன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் சந்தீப் சர்மா, ஜேசன் ஜோல்டர், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Tags :
|