Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

By: Karunakaran Sat, 31 Oct 2020 10:10:57 AM

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தனர்.

கேஎல் ராகுல் - கிறிஸ் கெய்ல் ஜோடி 14.4 ஓவரில் 121 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கேஎல் ராகுல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். கெயில் 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

rajasthan,punjab,7 wickets,ipl 2020 ,ராஜஸ்தான், பஞ்சாப், 7 விக்கெட், ஐ.பி.எல் 2020

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். உத்தப்பா நிதானமாக ஆட, ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய உத்தப்பா 30 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சாம்சன் 25 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 48 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 31 ரன்னும், பட்லர் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இருப்பினும், ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

Tags :
|