Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தான் அணிக்கெதிராக ஷ்ரேயாஸ் அய்யர் காயம் - கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்ட தவான்

ராஜஸ்தான் அணிக்கெதிராக ஷ்ரேயாஸ் அய்யர் காயம் - கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்ட தவான்

By: Karunakaran Thu, 15 Oct 2020 7:18:20 PM

ராஜஸ்தான் அணிக்கெதிராக ஷ்ரேயாஸ் அய்யர் காயம் - கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்ட தவான்

துபாயில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் 30 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. இதனால் டெல்லி அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி ராஜஸ்தானை மீண்டும் வீழ்த்தி உள்ளது. ஏற்கனவே 46 ரன்னில் தோற்கடித்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தின் பிற்பகுதியில் தவான் அணியை வழி நடத்தினார்.

shreyas iyer,rajasthan,dhawan,delhi team ,ஸ்ரேயாஸ் ஐயர், ராஜஸ்தான், தவான், டெல்ஹி அணி

ராஜஸ்தானை வீழ்த்தியது குறித்து டெல்லி அணியின் தற்காலிக கேப்டன் தவான் கூறுகையில், இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டோம். அதை எங்களுக்கு சாதகமாக்கி கொண்டோம். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூறினார்.

ராஜஸ்தான் அணி 5-வது தோல்வியை தழுவியது. இது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறுகையில், இந்த தோல்வி எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. பந்துவீச்சுக்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் அதிகமான விக்கெட் விழுந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டது என்று கூறினார். டெல்லி அணி 9-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 17-ந்தேதி சார்ஜாவில் சந்திக்கவுள்ளது. ராஜஸ்தான் அடுத்த போட்டியில் அதே தினத்தில் பெங்களூர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Tags :
|