Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு அறிவிப்பு

ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு அறிவிப்பு

By: Karunakaran Sat, 01 Aug 2020 7:32:35 PM

ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும். அக்டோபர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, 30 முதல் 50 சதவீத ரசிகர்களை மைதானத்திற்குள் கொண்டு வந்துவிடலாம் என ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு நம்பிக்கையுடன் உள்ளது.

ipl match,fans,united arab emirates cricket board,corona virus ,ஐபிஎல் போட்டி, ரசிகர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம், கொரோனா வைரஸ்

ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டின் செயலாளர் முபாஷிர் உஸ்மானி இதுகுறித்து கூறுகையில், இந்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டது என்று பிசிசிஐ எங்களுக்கு தெரிவித்த உடன், நாங்களும், பிசிசிஐ-யும் தயார் செய்யும் பரிந்துரை மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் எங்கள் அரசிடம் கொண்டு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பிரபலமான இந்தத் தொடரை எங்களது மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், இது குறித்த அனைத்து முடிவுகளும் அரசை சார்ந்தது. பெரும்பாலான போட்டிகள் இங்கு நடைபெறும் போது 30 முதல் 50 சதவீத ரசிகர்கள் வருவார்கள். அரசு அனுமதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|