Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க தவறிவிட்டோம்; தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித் வேதனை

வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க தவறிவிட்டோம்; தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித் வேதனை

By: Nagaraj Sat, 03 Oct 2020 9:43:27 PM

வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க தவறிவிட்டோம்; தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித் வேதனை

இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க தவறிவிட்டோம். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்ததால் பார்டனர்ஷிப்பை அமைக்க முடியாமல் போய்விட்டது என்று ராஜஸ்தான் அணி ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. துபாயின் அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் லாம்ரோரை (47) தவிர மற்ற எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தட்டுத்தடுமாறி 154 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச், 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இதன் பின் கூட்டணி சேர்ந்த விராட் கோஹ்லி - தேவ்தட் படிக்கல் கூட்டணி நிதானமாக ரன் சேர்த்து பெங்களூர் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.

defeat,rajasthan royals,bangalore team,virat kohli ,தோல்வி, ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் அணி, விராட் கோலி

இதில் தேவ்தட் படிக்கல் 63 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோஹ்லி 53 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்து கை கொடுத்ததன் மூலம் 19வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடைந்த பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூர் அணியுடனான இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மீத் கூறுகையில், இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க தவறிவிட்டோம். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்ததால் பார்டனர்ஷிப்பை அமைக்க முடியாமல் போய்விட்டது. எங்கள் முதல் மூன்று வீரர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாட வேண்டும். தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்' என்றார்.

Tags :
|