Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இன்றைய ஆட்டத்திலும் வாட்சன்- பிளிஸ்சிஸ் ஜோடி அதிரடிக்குமா!

இன்றைய ஆட்டத்திலும் வாட்சன்- பிளிஸ்சிஸ் ஜோடி அதிரடிக்குமா!

By: Nagaraj Wed, 07 Oct 2020 1:19:01 PM

இன்றைய ஆட்டத்திலும் வாட்சன்- பிளிஸ்சிஸ் ஜோடி அதிரடிக்குமா!

கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்திலும் வாட்சன்- பிளிஸ்சிஸ் ஜோடியின் அதிரடி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதால் நெருக்கடிக்குள்ளானது.

தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதால் நெருக்கடிக்குள்ளானது. ‘இது மூத்த வீரர்களை கொண்ட அணி; இந்த சீசனில் தேறாது’ என்றெல்லாம் சமூக வலைதளத்தில் தாறுமாறாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் தடாலடியாக எழுச்சி பெற்ற சென்னை அணி இரு தினங்களுக்கு முன்பு பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது. அந்த அணி நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ் இருவரும் அரைசதம் விளாசி விக்கெட் இழப்பின்றி எட்ட வைத்து சாதனை படைத்தனர். இதனால் சென்னை அணியின் நம்பிக்கையும், உத்வேகமும் இப்போது அதிகரித்துள்ளது.

Tags :