Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • வரலாற்றுக் கட்டிடங்கள் அமைந்துள்ள ராஸ் தீவுவிற்கு ஒரு பயணம்!

வரலாற்றுக் கட்டிடங்கள் அமைந்துள்ள ராஸ் தீவுவிற்கு ஒரு பயணம்!

By: Monisha Wed, 30 Sept 2020 1:32:15 PM

வரலாற்றுக் கட்டிடங்கள் அமைந்துள்ள ராஸ் தீவுவிற்கு ஒரு பயணம்!

அந்தமான் நிகோபார் தீவு கூட்டத்தில் ராஸ் தீவும் ஒன்றாகும். இது போர்ட் பிளேர் நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கே அமைந்துள்ளது. ராஸ் தீவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சில கட்டிட அமைப்புகளின் சிதிலங்கள் காணப்படுகின்றன. வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த இடிபாடுகள் காணப்படும் இந்த தீவுப்பகுதி பல வருடங்களாகவே முக்கியமான சுற்றுலாத்தலமாக பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஆங்கிலேயே ஆக்கிரமிப்பு காலம் தொடங்கி சுதந்திரபோராட்டக்காலம் வரையிலான பல்வேறு நிகழ்வுகளோடு தொடர்புடைய வரலாற்றுக் கட்டிடங்கள் இந்த ராஸ் தீவில் அமைந்துள்ளன. போர்ட் பிளேரிலிருந்து ராஸ் தீவிலுள்ள பீனிக்ஸ் ஜெட்டி துறைமுகத்திற்கு படகு வசதிகள் கிடைக்கின்றன. முழுக்க முழுக்க இந்திய கப்பற்கடையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ராஸ் தீவிற்கு வருகை தரும் பயணிகளின் வருகை மற்றும் வெளியேற்றம் ஆகியவை பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

historic buildings,ross island,andaman and nicobar islands,tourism,travelers ,வரலாற்றுக் கட்டிடங்கள்,ராஸ் தீவு,அந்தமான் நிகோபார் தீவுகள்,சுற்றுலாத்தலம்,பயணிகள்

வரலாற்றுப்பிரியர்களால் இந்த ராஸ் தீவு முக்கியமான இடமாக கருதப்படுவதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதாவது, 1857ம் ஆண்டில் முதல் சுதந்திர போராட்டம் வெடித்தபின்னர் ஆங்கிலேயெ அரசாங்கம் இந்த தீவுப்பகுதியை அதிதீவிர சிறை வளாகமாக மாற்றி இங்கு முக்கியமான அரசியல் கைதிகளை அடைத்துவைக்க திட்டமிட்டது.

இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகள் ஏறக்குறை 80 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக, இந்த தீவுக்குள்ளேயே குடியிருப்புப்பகுதிகள், மருத்துவமனை வசதிகள், உணவுக்கூடங்கள், கடைத்தெரு, விளையாட்டு மையங்கள் போன்றவை இத்தீவில் அமைக்கப்பட்டிருந்தன.

இப்படி ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் யாவும் இன்று சிதிலங்களாக காட்சியளிப்பதுதான் இந்த ராஸ் தீவின் பிரதான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போது இந்த தீவுப்பகுதி ஜப்பானின் தாக்குதலில் சிக்கிக்கொண்டதே இங்குள்ள கட்டமைப்புகள் சேதமடைந்ததற்கு காரணமாகும். ராஸ் தீவை ஒட்டியே அமைந்துள்ள ஸ்மித் தீவும் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடமாகும்.

Tags :