Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் மிகப்பெரிய 3 ஹோட்டல்கள்!

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் மிகப்பெரிய 3 ஹோட்டல்கள்!

By: Monisha Wed, 18 Nov 2020 3:42:45 PM

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகின் மிகப்பெரிய 3 ஹோட்டல்கள்!

உலகெங்கிலும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏராளமான ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. பல ஹோட்டல்கள் கண்ணை கவரும் விதத்தில் ஏராளமான வசதிகளை கொண்டு கட்டப்பட்டிருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் பல வசதிகளோடு பல நாடுகளில் பெரிய ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பதிவில் உலகில் அமைந்துள்ள மிகப்பெரிய 3 ஹோட்டல்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

பஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல்
முதலிடத்தில் இருப்பது பஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல் (First World Hotel). இந்த ஹோட்டலில் 7,351 அறைகள் உள்ளன. இது இரண்டு டவர் கொண்ட முதல் டவர் 24 மாடிகளையும் 2 வது டவர் 28 மாடிகளையும் கொண்டுள்ளது. இது மலேசியாவின் பஹாங்கில உள்ள மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இது உலகின் மிகப்பெரிய ஹோட்டலுக்கான அறைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 36 மாடிகள் உள்ளது. இதில் எட்டு மாடிகள் வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.

tourists,hotel,malaysia,usa,resort ,சுற்றுலா பயணிகள்,ஹோட்டல்,மலேசியா,அமெரிக்கா,ரிசார்ட்

தி வெனிசியன் ரிசார்ட் லாஸ் வேகாஸ்
இரண்டாவது இடத்தில் இருப்பது தி வெனிசியன் ரிசார்ட் லாஸ் வேகாஸ் (The Venetian Resort Las Vegas). இந்த ஹோட்டலில் மொத்தம் 7,092 அறைகள் உள்ளது. மொத்தம் 53 மாடிகளை கொண்டது. இது அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் அமைந்துள்ளது.

4,027 விருந்தினர் அறைகளை கொண்டுள்ளது. ஒரு ஆடம்பர ஹோட்டல் மற்றும் கேசினோ கொண்டதாகும். இது பழைய சாண்ட்ஸ் ஹோட்டல் தளத்தில் அமெரிக்காவின் நெவாடாவின் பாரடைஸில் உள்ள லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பில் அமைந்துள்ளது.

கிளிங்ஸ்டபின்ஸால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டல் கோபுரத்தில் 36 மாடிகள் 475 அடி உயரத்தில் உள்ளது. இந்த வெனிஸ் லாஸ் வேகாஸ் சாண்ட்ஸுக்கு சொந்தமானது. இந்த ஹோட்டல் ரிசார்ட் மே- 3 1999 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

tourists,hotel,malaysia,usa,resort ,சுற்றுலா பயணிகள்,ஹோட்டல்,மலேசியா,அமெரிக்கா,ரிசார்ட்

எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் அண்ட் சிக்நேச்சர்
மூன்றாவது இடத்தில் இருப்பது எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் அண்ட் சிக்நேச்சர் (MGM Grand Las Vegas and The Signature.) இந்த ஹோட்டலில் மொத்தம் 6,852 அறைகள் உள்ளன. இரண்டு மாடிகளில் எம்ஜிஎம் கிராண்ட் 30 மாடிகளையும் சிக்நேச்சர் 38 மாடிகளையும் கொண்டுள்ளது.

எம்ஜிஎம் கிராண்டில் உள்ள சிக்நேச்சர் லாஸ் வேகாஸ் பகுதிக்கு அருகிலுள்ள நெவாடாவின் பாரடைஸில் உள்ள எம்ஜிஎம் கிராண்ட் லாஸ் வேகாஸ் ரிசார்ட்டில் உள்ள ஒரு காண்டோ ஹோட்டல் ஆகும். இது மூன்று ஒரே அளவிலான 38 அடுக்கு கோபுரங்களை கொண்டுள்ளது. இந்த ஹோட்டல் 2006 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

Tags :
|
|