வேல் யாத்திரைக்கு யாரிடமும் அனுமதி கேட்க அவசியமில்லை

யாரிடம் அனுமதி கேட்க அவசியமில்லை... வேல் யாத்திரை நடத்த யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தலை காவிரியிலிருந்து பூம்புகார் வரை ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி அம்மன் ரதயாத்திரை உற்சவ நிகழ்ச்சி, கஞ்சனூர் வட காவிரி படித்துறையில் மகா ஆரத்தியுடன் நடந்தது.

இதில் பங்கேற்ற மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மனுதர்மநூலைப் பற்றியோ இந்து தர்மத்தை பற்றியோ திருமாவளவன் போன்றவருக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார். மேலும் மனுதர்ம நூலில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ளாமல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாசகங்கள் இருப்பதாக கூறுவது தவறு.

மேலும் தமிழகத்தில் பாஜக சார்பில் நடத்தும் வேல் யாத்திரை இந்துக்கள் சம்பந்தப்பட்டது. இதற்கு தடை போடுவது என்பது நியாயமல்ல. இந்துக்களுக்கு சொந்தமான வேல் யாத்திரையை நடத்த இந்துக்களுக்கு முழு உரிமை உள்ளது.

அதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.