நடப்பாண்டில் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் 4 ஆயிரம் கோடி முதலீட்டை பெற்றன

4 ஆயிரம் கோடி முதலீடு... வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு ஆண்டில், கடந்த ஏப்ரல் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை பெற்றுள்ளன.

இதுகுறித்து, இ.ஒய்., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் ஏப்ரல் வரையிலான காலத்தில், 532 மில்லியன் டாலர் அதாவது, 3,937 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளன.

வரும், 2025ல், 24 பில்லியன் டாலர் அதாவது, 1.78 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக வளர்ச்சி பெறும்.இந்தியாவில் விவசாயத் துறையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக, வினியோக துறையில் நன்றாக வளர்ச்சி கண்டு வருகின்றன. வேளாண் தொழில்நுட்பம், வளமையான விவசாய வினியோக அமைப்பில் ஏற்படும் பல்வேறு சவால்களை தீர்க்க உதவுகிறது.

உலகளாவிய முதலீட்டாளர்கள், வேளாண் தொழில்நுட்ப பிரிவுகளில், தங்களுடைய வெற்றிகரமான முதலீட்டு முறைகளை பயன்படுத்தி, இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.