ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 832 ரூபாய் குறைந்தது!

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் காணப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் பவுனுக்கு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின்னர் விலை ரூ.38 ஆயிரத்துக்கு மேலேயே இருந்து வந்த நிலையில் தற்போது தங்கம் விலை சில நாட்களாக சரிந்து வருகிறது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 832 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 104 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 644 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 80 காசு குறைந்து 64 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.