வெங்காய விளைச்சல் வீழ்ச்சி அடையும் என தகவல்

வெங்காய விளைச்சல் வீழ்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரிப் பருவத்தில் வெங்காயம் ஜூலை-ஆகஸ்ட் மாதம் விதைக்கப்பட்டு அக்டோபர்-டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் அறுவடையாகும்.

இவ்வருடம் கனமழை காரணமாக மஹாராஷ்டிராவில் வெங்காய பயிர் சேதமடைந்தது. இதனால் இந்தாண்டின் காரிப் பருவத்தில் வெங்காய விளைச்சலில் 9 லட்சம் டன்கள் அளவுக்கு வீழ்ச்சி அடையும் என்று நாளிதழ் சகல் தெரிவித்துள்ளது.

இதே போல் தக்காளி விளைச்சலில் 29 ஆயிரம் டன்கள், உருளை விளைச்சலில் 1 லட்சத்து 75 ஆயிரம் டன்கள் அளவுக்கு பாதிப்பு இருக்கும் என வேளாண் மற்றும் உழவன் நலன் அமைச்சகம் கணித்துள்ளது. கடந்த செப்., 14ல் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்ளூர் சந்தைகளில் வெங்காய விலையை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.