தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசத்தல் சலுகைகளை அறிவித்த ரெனால்ட் நிறுவனம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

அந்த வகையில் பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைவர் போன் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரையிலான பலன்களும், க்விட் மாடலுக்கு ரூ. 49 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், டிரைவர் மாடலுக்கு ரூ. 39 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன.

சிறப்பு சலுகையில் கார்ப்பரேட் தள்ளுபடி, லாயல்டி போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் ஊரக பகுதியில் வசிப்போருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.