சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவையை அறிமுகம்

சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்திங்ஸ் எனும் சேவையை தனது ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் ப்ளூடூத் லோ எனர்ஜி மற்றும் அல்ட்ரா வைடுபேண்ட் கொண்டு இணைக்கப்பட்ட சாம்சங் சாதனங்களை கண்டறிய பயன்படுகிறது. இந்த அம்சம் சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் வயர்லெஸ் இயர்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்களிடையே சீராக இயங்குகிறது.

ப்ளூடூத் சார்ந்து இயங்குவதால் இது சாதனம் 30 நிமிடங்கள் வரை ஆப்லைனில் இருந்தாலும் சாதனங்களை கண்டறியும். சாதனங்களிடையே தரவுகள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட்திங்ஸ் செயலியினுள் இன்டகிரேட் செய்யப்பட்ட மேப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதை கொண்டு காணாமல் போன சாதனங்களை ரிங் செய்யும் வசதியை வழங்குகிறது. மேலும் சாதனங்களின் அருகில் இருக்கும் போது சாதனங்களை ஏஆர் சார்ந்த சர்ச் வசதி மூலம் கண்டறிய முடியும். இது சாதனத்தின் அருகில் இருக்கும் போது கலர் கிராபிக்ஸ் திரையில் தோன்றும்.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சாதனங்களை கண்டறியும் இந்த புதிய சேவையை ஆண்ட்ராய்டு 8 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளம் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட்திங்ஸ் பைண்ட் அம்சம் அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.