இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டே வருகிறது. கடந்த 21ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூ.5,670-க்கு விற்பனையானது.

இதையடுத்து நேற்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனையானது. அதேபோன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 அதிகரித்து ள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 45,400க்கு விற்பனையாகிறது. மேலும் அத்துடன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 5,675க்கும் விற்பனையாகிறது.