இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: கடந்த ஜூலை மாதம் முதல் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது, அதை தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதன் படி , இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.38,360க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் மக்கள் பலர் தங்கம் வாங்க குவிந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,830 விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து, ரூ.61.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.