இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: மத்திய அரசு தங்கத்தின் மீதான GST வரியை 3% அதிகரித்தியது. அதை தொடர்ந்து இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டது.இந்த இறங்குமதி உயர்த்தப்பட்ட ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ. 1000 வரை உயர்த்தது. அதன் பின் தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சற்று குறைந்து விற்கப்பட்டதால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர். ஆனால் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது .

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4830.00 என விற்பனையாகிறது. அதேபோன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 38640.00 என விற்பனையாகி வருகிறது.

மேலும் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5232.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41856.00 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோன்று இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 61.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61100.00 எனவும் விற்பனையாகி வருகிறது