உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிந்தால் தான் அழகு

ஆள் பாதி ஆடை பாதி என்று கூறுவார்கள். நம்முடைய தோற்றத்தை மேம்படுத்தி காண்பிப்பதில் ஆடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பலரும் தங்களுக்கு பிடித்த உடைகளை அணிய விரும்பினாலும், அவை நமக்கு பொருந்துகிறதா என பார்ப்பதில்லை. உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிந்தால் அழகாக இருக்கும். இல்லையெனில் அழகான ஆடையை அணிந்தாலும் அது ஏற்றதாக இருக்காது.

பருமனாக இருக்கும் பெண்கள் பொருத்தமான ஆடைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். கொஞ்சம் தளர்வான ஆடைகளை அணியலாம். அதற்காக மிகவும் தளர்வான ஆடைகள் அணிய கூடாது. மேலும் சரியான அளவில் ஆடை அணிந்து கொண்டு மூச்சு விட முடியாத அளவுக்கு இறுக்கமாக ஆடை அணிவதும் தவறு தான்.

கண்களை கூச செய்யும் வகையில் பளிச் நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். பளிச் நிற ஆடைகள் தோற்றத்தை மேலும் பெரிதாக காட்டும். நிறம் குறைவாக உள்ள ஆடைகள், உங்களின் பருமனை குறைத்து உயரத்தை அதிகமாக காட்டும். பெண்கள் ஆடைக்கு ஏற்ற வகையில் நகைகளை அணிய வேண்டும். அப்போது தான் உடல் அழகாக தோற்றமளிக்கும்.

பெரிய அளவில் கொலுசு அணிவதையும், காதில் பெரிய அளவிலான வளையங்கள் அணிவதையும் தவிர்த்தால் நன்றாக இருக்கும். நாம் அணியும் ஆடைக்கு ஏற்ற நகைகளை அணிய வேண்டும். பிடித்தமான ஆடை, நகைகளை விட நமக்கு பொருத்தமான ஆடை, அணிகலன்களை நமது அழகை மேம்படுத்த முடியும்.