தமிழகத்து புடவைகளில் சில வகைகள் உங்களுக்காக!

புடவை என்றாலே தமிழகம் தான் நினைவுக்கு வரும். தமிழகத்து புடவைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளை தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவுக்கே பெருமை தேடித் தருபவை காஞ்சிவரம் சில்க் புடவைகள். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றுமதி ஆவதிலும் முதலிடத்தை பிடித்திருக்கும் காஞ்சிவரம் பட்டுப் புடவைகள் நமது தமிழகத்தில் உள்ள காஞ்சிவரம் எனும் ஊரில் தயார் ஆகிறது. பல கை வேலைப்பாடுகள், கலைநுணுக்கங்கள் கொண்ட புடவையாக விளங்குகிறது.

ராசிபுரம் புடவை என்று அழைக்கப்படும் இவ்வகை புடவைகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் தயாராகிறது. அந்த ஊரில் கைத்தறி நெசவுகளும் பட்டுத்தறிகளும் தான் குலத்தொழில். நிறைய நெசவாளர்களை தன்னகத்தே கொண்ட ஊரில் கைத்தறி புடவைகளில் நெசவாளர்களின் கைவண்ணம் நம்மை ஆச்சரியப்படுத்தும். பட்டுபுடவைகளிலும் காஞ்சிவரம் புடவைக்கு நிகரான தரத்தை இவர்கள் வழங்குகிறார்கள்.

தமிழ்நாட்டு திருமணங்கள் என்றாலே பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன. அதிலும் டிசைனர் புடவைகள் பியூஷன் புடவைகள் என பல விதமான புடவைகள் வந்திருக்கின்றன. இதனைத் தவிர இப்போதெல்லாம் வடஇந்தியர்கள் போல லெஹன்கா அணியும் கலாச்சாரமும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் பாரம்பர்ய திருமணப்புடவைகள் என்றாலே அது தமிழகம்தான்.

கலாச்சாரம் வளர வளர புடவை நெசவுகளிலும் புதுமை புகுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது பலவகைகளில் டிசைனர் புடவைகள் தயார் ஆகிறது. எம்ப்ராய்டரி முதல் கண்ணாடி வேலைப்பாடுகள் வரை கலையின் கைவண்ணத்தை புடவையில் காட்டி வருகின்றனர். மனித கற்பனை திறனையும் அவர்கள் உழைப்பையும் நேரத்தையும் இந்த டிசைனர் புடவைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் அதிக விலை தர வேண்டி இருக்கிறது.

ஷிபான் புடவைகள் பொதுவாக எடை குறைவாக இருக்கும். இந்த வகையான புடவைகளும் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன. அணிவதற்கு லேசாக இருக்கும் அதே சமயம் எண்ண முடியாத பல நிறங்களில் இவ்வகை புடவைகள் கிடைக்கும்.

ஜார்ஜெட் புடவைகள் அணிவதற்கு சுலபம் அதே சமயம் ஆடம்பர தோற்றம் ரிச் லுக் வேண்டும் என்பவர்கள் இந்த வகை ஆடைகளை அணியலாம். இவ்வகை ஆடைகளுக்கு இளம் பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். ஜார்ஜெட் புடவைகள் 300 ரூபாயில் இருந்து வாங்க கிடைக்கிறது.