Whatsappபில் வெளியான சூப்பர் அப்டேட்

இந்தியா: Whatsapp சேனல்களை பயன்படுத்தும் பயனர்கள் அட்மின்களை உருவாக்கிக்கொள்ளும்படியான அப்டேட்வெளியீடு ...உலகம் முழுவதும் பில்லியன்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களுக்காக பல அப்டேட்கள் வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இச்செயலியை பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் உரையாட பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும்படியாக பல பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், புதுவிதமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியை போல பிறரின் அக்கௌன்ட்களை பாலோவ் செய்யும்படியாக சேனல் என்னும் புதிய வசதி வழங்கப்பட்டது. இதன் மூலமாக விரும்பிய நபரை பின்தொடர முடியும் மற்றும் அவரின் கருத்துக்களை வாட்ஸ்அப் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலையில், சேனல்களில் பதிவினை வெளியிடும் பயனர்கள் தங்களுக்கென அட்மின்களை தேர்வு செய்துகொள்ளும்படியான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.