வாட்ஸ் அப்பில் அனுப்பிய புகைப்படங்களை திருத்தும் வசதி தற்போது வெளியீடு

இந்தியா: மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp செயலி அதிக அளவிலான பயனாளர்கள் பயன்படுத்தும் செயலியாகவுள்ளது. இதையடுத்து இதில் பல்வேறு வகையான அம்சங்கள் அடிக்கடி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் தற்போது நாம் அனுப்பிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF களின் கேப்சன்களை திருத்தம் செய்து கொள்ளும் வசதி வந்து உள்ளது.

அதன்படி இவற்றை நாம் அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மே மாதம் முதல் பயனர்களுக்கு கிடைத்துவரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை எதுவும் WhatsApp இன்னும் வெளியிடவில்லை.


எனினும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகி அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் போலவே சமீபத்தில் whatsapp-ல் HD தரத்திலான புகைப்படங்களை அனுப்பும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கும அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே HD வீடியோக்களை அனுப்பும் வசதி வாட்ஸ் அப் செயலியில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.