உங்கள் உடலமைப்பு பற்றி தெரியுமா? ஜீன்ஸ் பேண்ட் தேர்வு செய்ய முறையான வழி!

உங்கள் உடம்பின் வடிவத்திற்கு ஏற்ப சரியான ஜீன்ஸை நீங்கள் அணிந்தால், பிரபலங்களை போல அந்த ஒரு அட்டகாசமான தோற்றத்தை நீங்களும் அடையலாம். இதுவரை நீங்கள் வாங்கிய ஜீன்ஸ் பேண்ட் எதுவும் உங்களுக்கு சரியாக பொருந்தவில்லையா? இந்த பதிவில் உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற வகையில் ஜீன்ஸ் பேண்ட் தேர்வு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பியர் ஷேப்
உங்கள் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கனமாக இருப்பதால் இடுப்பின் மத்தியில் உயர்வான ஜீனிற்கு செல்லுங்கள். இது உங்கள் கால்களை நீளமாகவும் ஒல்லியாகவும் காட்ட உதவும். அல்லது ஒரு ரிலாக்ஸ் பிட் ஜீன் உங்கள் கீழ் பகுதிகளை நிஜத்திற்கும் முரணாக காட்ட உதவும். ஹை வெய்ஸ்ட் ஜீன் மற்றும் இலகுவான நிறங்கள் கொண்ட ஜீன்களை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள் ஷேப்
இந்த வடிவத்தில் இருப்பவர்கள் உங்கள் இடுப்புப் பகுதியை மேலும் கனமாக காண்பிக்காமல் தவிர்க்க ஒரு பிளேர் டிசைன் - பூட் கட் ஜீன் உடன் மிட்-ரைஸ் வெய்ஸ்ட் வகையை அணியலாம். இது உங்கள் இடுப்பில் இருந்து ஒரு இன்ச் கீழிருந்து ஆரம்பிப்பதால் உங்கள் கனமான இடுப்பை உள்ளடக்கி நல்ல வடிவத்தை கொடுக்கும். இறுக்கமான ஜீன், ஸ்கின்னி ஜீன் மற்றும் ஹை ரைஸ் ஜீன் உங்கள் இடுப்பின் பகுதிகளை மேலும் பெரிதாக காட்டும் எனவே இவற்றை தவிர்த்து விடுங்கள்.

ஹவர் கிளாஸ் ஷேப்
சிறிய இடுப்பு, வளைவுடன் இருக்கும் கீழ் பகுதி மற்றும் முழு மார்பகமாக இருக்கும் உடல் வடிவத்தை ஹவர் கிளாஸ் என்று கூறலாம். இதற்கு நீங்கள் ஒரு பூட் கட் ஜீன், பரந்த கால்கள் கொண்ட டிரௌசர் ஜீன் அல்லது பிளேர் அணிந்தால் சரியாக இருக்கும். இது உங்கள் தொடைகளை பெரிதாக இல்லாமல் சரியான அளவில் காட்டும் மேலும் உங்கள் கால்களை நீளமாகவும் காண்பிக்கிறது. ஸ்கின்னி ஜீன்,டையிட் பிட் ஜீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உயரமான உடல் அமைப்பு
உயரமான உடலமைப்பு உள்ளவர்கள் எந்த விதமான ஜீன் பேண்ட்டுகளையும் எளிதில் அணியலாம். இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை பிளேர் ஜீன், பூட் கட் ஜீன் அல்லது ஸ்கின்னி ஜீன். அதிலும் உங்கள் இடுப்பிற்கு மேல் அல்லது கீழ் அணியும் ஜீன்கள் மிக பொருத்தமாக இருக்கும். இவை அனைத்தும் உங்கள் உடலின் உயரமான தோற்றத்தை இன்னும் அழகாக முன்வைக்கும்.

அத்லெடிக் ஷேப்
நீங்கள் ஒரு அத்லெட்டிக் அதாவது ஒல்லியான உடம்பு அமைப்புள்ளவர்கள் என்றால் உங்கள் உடம்பில் வளைவுகளை தெளிவாக காட்டக்கூடிய ஜீன் பேண்ட்டுகள் அவசியம். ஆகையால் பிளேர் ஜீன் அல்லது பூட் கட் ஜீன் அதாவது இடுப்பின் பகுதிகளிலும் மேல் தொடை பகுதிகளிலும் இறுக்கமான வடிவம் கொண்டு முழங்கால் கணுக்கால் இடங்களில் தளர்வாக காட்டக்கூடிய இந்த வகை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். உங்கள் உடல் அமைப்பு ஏற்கனவே ஒல்லியாக இருப்பதால் ஸ்கின்னி ஜீன் அல்லது ஏதேனும் உங்களை இன்னும் சிறிதாக காட்டக்கூடிய வடிவங்களை தவிர்த்து விடுங்கள்.