பின்னழகை வெளிப்படுத்த எந்த மாதிரியான ஃபேஷனை பின்பற்றலாம்?

பெண்களுள் சிலருக்கு பின்னழகு சற்று பெரியதாக இருக்கும். இதனால் தமக்கு பிடித்த ஆடைகளை உடுத்த முடியாமல் வருத்தப்படுவார்கள். ஆனால் அப்படி பெரியதாக இருக்கும் பின்னழகை ஒருசில ஃபேஷன் டிப்ஸ் மூலம் எடுப்பானதாக வெளிக்காட்ட முடியும். பெரியதாக பேக் உள்ள பெண்கள், அதனை மறைத்து அழகாக வெளிப்படுத்த எந்த மாதிரியான ஃபேஷனை பின்பற்றலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்!

ஜெக்கிங்ஸ்
பின்னழகை எடுப்பாகவும் அழகாகவும் வெளிப்படுத்த வேண்டுமானால், ஜெக்கிங்ஸ் அணியலாம். இதனால் உங்கள் பின்னழகு அசிங்கமாக இல்லாமல், இன்னும் அழகுடன் வெளிப்படும்.

பென்சில் ஸ்கர்ட்
பெரிய பின்னழகு கொண்ட நடிகைகள் பெரும்பாலும் பென்சில் ஸ்கர்ட் தான் அணிவார். மேலும் இந்த மாதிரியான ஸ்கர்ட் அணிந்தால், வயிற்று தொப்பையும் மறைந்து, பின்னழகும் எடுப்பாக காணப்படும்.

ஹை வெயிஸ்ட் பேண்ட்
பெரிய பேக் உள்ளவர்கள், குறிப்பாக பின்னழகை மிகுந்த கவர்ச்சியுடன் வெளிப்படுத்த நினைப்பவர்கள், முழங்கால் அளவுள்ள ஹை வெயிஸ்ட் பேண்ட் அணியலாம். இதனால் பின்னழகானது கவர்ச்சியுடன் வெளிப்படும்.

பாக்கெட் பேண்ட்
சிலருக்கு பின்புறம் பாக்கெட் உள்ள பேண்ட் அணிய பிடிக்காது. அத்தகையவர்கள், குறிப்பாக ஒல்லியாக இருந்து, பேக் பெரியதாக இருந்தால், பாக்கெட் பேண்ட் அணியலாம். இதுவும் பின்னழகை அழகாக வெளிப்படுத்தும்.

சிகரெட் பேண்ட்
பெரிய அளவில் பேக் உள்ள பெண்களுக்கு சிகரெட் பேண்ட் மிகவும் சிறந்த ஒன்று. இதனால் பின்னழகு மற்றும் தொடை இறுக்கப்பட்டு உடலானது நன்கு சிக்கென்று வெளிப்படும்.

குட்டை பாவாடைகள்
குட்டையான பாவாடைகள் கூட பின்னழகை அழகாக வெளிப்படுத்தும். ஆனால் அதற்கு கால்கள் மிகவும் அழகாக, மென்மையாக இருக்க வேண்டும். அதிலும் முழங்கால் அளவுள்ள சாக்ஸ் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

லைட் Vs டார்க் கலர்
ஃபேஷன் நிபுணர்களின் கருத்துப்படி, பெரியதாக பேக் கொண்டவர்கள், மேலே லைட் கலர் டாப்ஸையும், கீழே அடர் நிற பேண்ட்டும் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எனவே இதனை முயற்சித்துப் பாருங்கள்.