Whatsappல் வந்துருக்கும் புதிய அப்டேட்


இந்தியா: வாட்ஸ்ஆப்பில் சரிபார்ப்பு குறி பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாற்றம் ...மக்கள் மத்தியில் விருப்பமான செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் அதன் பயனர்களின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை கொண்டு வந்த வகையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது சமீபத்திய பீட்டா புதுப்பிப்பில், சில சரிபார்க்கப்பட்ட வாட்ஸ்அப் சேனல்கள் மற்றும் வணிக அக்கவுண்ட் ப்ரொபைல்கள் பச்சை நிற குறி உடனிருந்தது, தற்போது நீல நிற சரிபார்ப்பு குறியாக மாறி இருக்கிறது.

மேலும் இது வணிக அங்கீகாரம், ஆள்மாறாட்டம் பாதுகாப்பு, கணக்கு ஆதரவுக்கான அணுகல் போன்றவற்றிற்கு அடையாளமாக இருக்கிறது. இதனை பெற மாதம் $22 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிற மாற்றம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இடையே சில உறுதியான ஒருங்கிணைப்பைக் காட்டுகிறது. மேலும் மக்களும் நம்பிக்கையுடன் விருப்பமான சேனல்களை தொடர இது பயனு உள்ளதாகயிருக்கிறது.