சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக 11,193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக தற்போது 11,193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக இருந்தாலும், 5,36,209 பேர் குணமடைந்துள்ளதால் தற்போது 46,281 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு 9,453 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,66,029 ஆக உள்ளது. 11,193 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,232
அண்ணா நகர் - 1,197
தேனாம்பேட்டை - 1,064
தண்டையார்பேட்டை - 740
ராயபுரம் - 859
அடையாறு - 995
திரு.வி.க. நகர் - 895
வளசரவாக்கம் - 840
அம்பத்தூர் - 790
திருவொற்றியூர் - 261
மாதவரம் - 444
ஆலந்தூர் - 591
பெருங்குடி - 494
சோழிங்கநல்லூர் - 346
மணலி - 211