சென்னையில் கொரோனாவுக்கு 11,983 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 02 ஆயிரத்து 283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், பலி எண்ணிக்கை 4241 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. சென்னையில் மட்டும் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு நேற்று வரை 2,176 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்த 11,983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,357
அண்ணா நகர் - 1,250
தேனாம்பேட்டை - 900
தண்டையார்பேட்டை - 661
ராயபுரம் - 827
அடையாறு - 944
திரு.வி.க. நகர் - 931
வளசரவாக்கம் - 890
அம்பத்தூர் - 1,334
திருவொற்றியூர் - 453
மாதவரம் - 619
ஆலந்தூர் - 561
பெருங்குடி - 526
சோழிங்கநல்லூர் - 449
மணலி - 113