1.25 லட்சம் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலை; அமேசான் அறிவிப்பு

அமேசானின் அட்டகாசமான அறிவிப்பு... தற்காலிகமாக பணியாற்றி வந்த 1,25,000 ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கவுள்ளதாக அமேசான் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக அளவில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றதால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், உலக ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிபறக்கும் அமேசான் தற்காலிக பணியாளர்களான 125000 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கொடுக்க தயாராக உள்ளதாக
அறிவித்துள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அமேசானில் விற்பனை சூடுபிடித்துள்ளது. அமேசானின் இந்த அறிவிப்பு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.