சூடான் உள்நாட்டு யுத்தத்தால் 13 லட்சம் பேர் அகதிகளாக அவலம்

சூடான்: 13 லட்சம் பேர் அகதிகளாகினர்... சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

சூடானில் ராணுவத்திற்கும் அதன் துணை ராணுவப்படையினருக்கும் ஏற்பட்ட மோதலால் கடும் யுத்தம் நீடிக்கிறது.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர்.

190 குழந்தைகள் உட்பட 863 அப்பாவி மக்கள் இந்தப் போரால் உயிரிழந்து விட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் துப்பாக்கிச்சூடு உட்பட பல சம்பவங்கள் நடந்தது. இதிலும் அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.