தேனியில் இன்று ஒரே நாளில் 134 பேர் கொரோனாவால் பாதிப்பு

தேனியில் ஏற்கனவே 1,729 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 1,729 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 134 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,863 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 608 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.